சட்டசபையில் மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் நிருபர்கள் சந்திப்பில் அப்பாவு கூறியதாவது: ‘‘தமிழக சட்டசபை மார்ச் 14ம் தேதி காலை 9. 30 மணிக்கு கூட உள்ளது. அன்றைய தினம், 2025- 26ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்.

மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’’ இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal