‘நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் என்ன பேசுகிறார் என்று தெரியாமல் பேசுகிறாரா? அல்லது புரியாமல் பேசுகிறாரா? அல்லது நிதானத்துடன்தான் பேசுகிறாரா?’ என தமிழக அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியிருகிறார்கள்?
பெரியார் தொண்டர்கள் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டுகளை வீசுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நேற்று சீமான் பேசியதாவது: ‘‘பிரபாகரனிடன் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள்.. நீங்கள் வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம்.. என் தலைவன் பிரபாகரன் கையில் வைத்திருப்பது வெடிகுண்டு.
நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு.. நான் உன் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டை உன் மீது வீசுகிறேன்.. என்ன நடக்கிறது என பார்…. ஏய்.. வெச்சிருக்கேன்.. இன்னும் வீசவில்லை.. வெடிகுண்டுகளை வீசினேன் என்றால் என்ன ஆவாய் என பார்த்துக் கொள்.. உன்னை புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது.. ‘பி கேர்ஃபுல்’… சேட்டையை வேறு எங்காவது வைத்துக் கொள்.. திராவிட குப்பைகளை உரமாக்கி தமிழ்த் தேசியத்தை வளர்க்க வந்த பிள்ளைகள் நாங்கள்.
பெரியார் ஆரிய அடிமை; ஆரிய கூட்டாளி மட்டுமல்ல. ஆங்கிலேய அடிமையனாகவும் வாழ்ந்திருக்கிறார். பெரியார் எந்த மதத்துக்கு எதிரான குறியீடு? தெருநாயை கல்லெறிந்தால் 4 தெரு தள்ளி போய் குலைப்பது போல அங்கே இருந்து கொண்டு போட்டோ பொய் அது பொய் என பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.. தமிழர்கள் என்று சொல்வதே இன எழுச்சிக்கு எதிரானது என்று சொன்னவர் பெரியார்.. எந்த இன எழுச்சிக்கு எதிரானது? யாரிடம் இருக்கிறது என் கேள்விக்கான பதில்? ஒழுங்காக பேசாமல் என்னிடம் சரணடையாவிட்டால் கொன்றே போடுவேன்.. திராவிட தத்துவம் செத்துப் போய்விட்டது.. தமிழ்த் தேசியம் சத்தோடு எழுந்து வருகிறது..
பெரிய கோட்பாட்டுச் சிங்கங்கள்தானே நீங்கள்.. ஓட்டுக்கு காசு கொடுக்காமல் என்னை வெல்ல முடியுமா? திராவிடம் என்பது வைதேகி காத்திருந்தாள் கிளைமேக்ஸ் போல செத்துப் போய்விட்டது… பல பேர் பெரியார் படத்தைப் பார்த்துக் கொண்டு கதை சொல்கின்றனர்.. நான் பெரியார் இப்படி எழுதி இருக்கிறார் என படித்துவிட்டு பேசுகிறேன்.. அது என்ன தந்தை பெரியார்? பிரபாகரன் மட்டும் திரு.பிரபாகரன்? தலைவர் பிரபாகரன் என சொல்லமாட்டீர்களா? நாங்கள் ஆட்சிக்கு வரும் போது மேதகு தலைவர் பிரபாகரன் என போட வைப்போம்’’ இவ்வாறு சீமான் பேசினார்.
சமீப காலமாக சீமான் பேசிவருவதைப் பார்க்கும் போது, பின்னணியில் பி.ஜே.பி. இருக்குமோ என சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக பேச்சு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!