‘‘2026-ம் ஆண்டு ஆடுகளத்தில் சந்திப்போம்!’’ என திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால் விடுத்தார்.

கரூர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் கரூர் லைட்ஹவுஸ் முனை பகுதியில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது: ‘‘ஆண்டாங்கோவில் ஊராட்சியை கரூர் மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது என்ற தீர்மானம் வேறு ஒரு தீர்மானத்தின் மீது ஒட்டப்பப்பட்டது எனக்கூறி முன்னாள் ஊராட்சி தலைவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒரு வார்டு உறுப்பினரை தவிர அனைத்து வார்டு உறுப்பினர்கள் சம்மதத்துடன் தீர்மானம் போடப்பட்டது. ஊராட்சி செயலாளர் ஒட்டியதை மறைத்து வழக்கு போட்டுள்ளனர். ஜனவரி 26-ம் தேதி கிராம சபைக்கூட்ட த்தில் 500 பேருக்கு மேல் சென்று ஆண்டாங்கோவில ஊராட்சியை கரூர் மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது என மனு அளித்தோம். அதனை குப்பையில் போட்டிருப்பார்கள். ஜனநாயக முறையில் நமது எதிர்ப்பை தெரிவித்தோம்.

மாநகராட்சியுடன் இணைத்தால் வீட்டு வரி உயர்வு, குப்பை வரி, காலிமனை வரி, புதைசாக்கடை வரி என ஏராளமான வரிகள் விதிக்கப்படும். எதற்கெடுத்தாலும் வழக்கு போட்டு வருகின்றனர். எத் தனை பொய் வழக்குகள் வேண்டுமானலும் போட்டுக் கொள்ளுங்கள். அனைத்தும் அப்படியே திரும்ப வரும். அரசு அதிகாரிகள் நேர்மையோடு செயல்படவேண்டும். இல்லாவிட்டால் செயல்பட வைப்போம்.

2026ம் ஆண்டில் ஆடுகளம் தயாராக உள்ளது. வாருங்கள் மோதுவோம். துரோகிகள் வெளியே சென்றுவிட்டனர். தற்போது உண்மையான அதிமுகவினர் தான் உள்ளோம். கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவோம் என சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal