ஓட்டுக்கு துட்டு’ என்ற ஃபார்முலா தமிழகத்தை தாண்டி டெல்லியிலும், அதுவும் ஆம் ஆத்மி கட்சியிலும் அரங்கேறியிருப்பதுதான் டெல்லி சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது.

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கு, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி பணம் பட்டுவாடாவை ரகசியமாக செய்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.பணம் விநியோகத்திற்கு , இந்த கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்பதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் சொல்ல வேண்டும். இதற்கு எதிராக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலானது, வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேயான அரசியல் மோதலானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு கட்சிகளும், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக, பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் டெல்லி தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பர்வேஷ் வர்மா கூறும்போது, “ ஃபெரோஸ் காந்தி கேம்ப் பகுதியில் பிரச்சாரத்தின் போது, ஆம் ஆத்மி கட்சியினர் பணம் விநியோகம் செய்தபோது பிடிபட்டனர். ஆம் ஆத்மி கட்சியினர் காலாண்டருக்குள் ரூ.500 மறைத்து வைத்து, விநியோகம் செய்துபோது, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

பணம் விநியோகம் செய்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து நாங்கள் புகார் அளித்துள்ளோம். இந்த பணம் எங்கிருந்து வந்தது என்று இ.சி.ஐ. மற்றும் டெல்லி காவல்ட்துறையிடம் புகார் அளித்துள்ளோம், மேலும் , இந்த பணம் எங்கிருந்து வந்தது என கேட்டிருக்கிறோம்.

“இந்த கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்பதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் சொல்ல வேண்டும். இதற்கு எதிராக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வேண்டும்’’ என குறிப்பிட்டார்.

பாஜக அழுத்தத்திற்கு, காவல்துறை செயல்படுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியதை அடுத்து இது வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி ராகவ் சதா தெரிவித்ததாவது, சனிக்கிழமை இரவு புதுதில்லி தொகுதியில் பரப்புரை செய்து கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சியினரை டெல்லி போலீசார் கைது செய்ததாக குற்றம் சாட்டினார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சாதா, “எங்கள் கட்சியினர் எந்த விதியையும் மீறவில்லை. எனவே, காவல்துறை அவர்கள் அனைவரையும் விடுவித்துவிட்டனர். ஆம் ஆத்மி வேகமாக வளர்ந்து வருவதை பொறுக்க முடியாமல், பாஜகவினர், அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிக்கிறது எனவும் தெரிவித்தார்.

டெல்லியில் ஆம் ஆத்மியின் பலம் குறைந்து, பா.ஜ.க.வின் பலம் அதிகரித்திருப்பதுதான் இந்த பணப்பட்டுவாடாவிற்கு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal