மலைக்கோட்டை மா.செ.வை மாற்றக்கோரி திருச்சியில் மீண்டும் கையெழுத்து இயக்கம் மறைமுகமாக நடந்து வருவதுதான் அ.தி.மு.க. தலைமைக்கு மீண்டும் அதிர்ச்சியை கொடுக்க காத்திருக்கிறது.
மலைக்கோட்டை மாவட்டத்தில் மா.செ.வை மாற்றக் கோரி 35 வட்டச் செயலாளர்கள் நேரடியாகவே எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு கொடுத்தார்கள். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.
இந்த நிலையில்தான் அடுத்த கட்டமாக அ.தி.மு.க.வில் உள்ள இணை, துணை நிர்வாகிகளிடம் கையெழுத்து வேட்டை நடந்து வருகிறதாம். விரைவில் அவர்களும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, ‘மா.செ.வை மாற்றுங்கள்…’ என கையெழுத்து போட்ட நோட்டை விரைவில் வழங்க இருக்கிறார்களாம்.
நேற்றுதான் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில்தான், திருச்சிக்கு வரும் போது மா.செ. மாற்றக்கோரி புதுவித யோசனையில் இறங்கியிருக்கிறதாம் எதிர்தரப்பு!
மலைக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் கையெழுத்து இயக்கம் நடந்து வருவதுதான் மாநகர் அ.தி.மு.க.வில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.