பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பாலியல் வன்கொடுமை வழக்கில், 14 ஆண்டுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்கும் வகையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டதிருத்த மசோதாவின் அம்சங்கள் என்னென்ன?

  • ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை
  • பாலியல் வன்கொடுமை வழக்கில், 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டணை.
  • மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை
  • பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை; ஜாமினில் வெளியே வர முடியாது.
  • குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை
  • நெருங்கிய உறவினரால், அதிகாரம் மிக்கவரால் பலாத்கார வழக்குகளில் ஆயுளுக்கும் சிறை.
  • கூட்டு பலாத்காரம், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தல் போன்றவற்றுக்கும் ஆயுள் சிறை தண்டனை

முதல்வர் தாக்கல் செய்த இந்த மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘‘பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்குகிறது. பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களுக்கு எதிராக, தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal