நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பெரியாரைப் பற்றி இழிவாக பேசிய விவகாரம்தான் விஸ்வருபம் எடுத்து வருகிறது.

தி.மு.க. சார்பில் துரைமுருகன், கனிமொழி ஆகியோர் கண்டனங்களை தெரிவித்த நிலையில், பெரியார் கொள்கைகளை ஏற்று கட்சியை நடத்தும் அ.தி.மு.க., ஓ-.பன்னீர்செல்வம், த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் வாய் திறக்காதது பற்றி தனது வலைதளப் பக்கத்தில் மறைமுகமாக சாடியிருக்கிறார் அரசியல் விமர்சகர் மருது அழகுராஜ்!

இது குறித்து மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில், ‘‘#பெரியார்

புரட்சித் தலைவரை தரம் தாழப் பேசியவர்….

மெரினா ஒரு திராவிட சுடுகாடு அங்கு மூன்று ஆண்களுக்கு நடுவில் ஒரு பெண் படுத்திருக்கிறார் என்று வரம்புமீறி விமர்சித்த கழிசடை…

இன்று பெரியார் மீது அசைன்ட்மென்ட் அடிப்படையில் அவதூறு பரப்புவதை கண்டிக்க தயங்குபவர்கள்…

பெரியார் எங்களது கொள்கை வழிகாட்டி இல்லை என்பதை அறிவித்து விடலாமே…

என்ன நாஞ் சொல்றது-?’’ என பதிவிட்டிருக்கிறார்.

பெரியார் கொள்கைகளை ஏற்று வழிநடத்தும் கட்சிகள் மௌனம் கலைக்காதது ஏன்..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal