தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மேயர் சரவணன், தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நெஞ்சுவலிப்பதாக கூறிய மேயர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு உள்ளார். தற்போது, தான் தாக்கப்பட்டதாக கூறி, தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.

கும்பகோணம் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வருகிறார் சரவணன். தமிழகத்தில் காங்., கட்சியின் ஒரே மேயரான இவருக்கும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நேற்று (டிச.,30) நடைபெற்றது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (டிச.,31) ‘தான் தாக்கப்பட்டதாக கூறி, தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். காங்கிரஸ் மேயர் சரவணன், தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரும், போட்டி போட்டு கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal