‘‘பட்டியலின மக்களுக்கு தினந்தோறும் கொடுமைகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது’’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், ‘‘ தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஈ.வெ.ரா., வழி வந்த திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்கின்றன. ஆனாலும், இந்தியாவிலேயே ஆணவ கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக, தமிழகம் உள்ளது. பட்டியலின மக்களுக்கு தினந்தோறும் கொடுமைகள் நடக்கும் மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது.
ஜாதிய உணர்வுகளும், ஜாதிய அணி சேர்க்கைகளும் கொடி கட்டும் பறக்கும் மாநிலமாக, தமிழகம் உள்ளது. அரை நூற்றாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், ஈ.வெ.ரா.,வின் கொள்கைகள் படிப்படியாக கைவிடப்பட்டு வருகின்றன என்பதைத் தான் இது காட்டுகிறது’’இவ்வாறு அவர் கூறினார்.
திராவிட கட்சியான தி-.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பேசியிருப்பதுதான் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.