தமிழ்நாட்டின் துணை முதல்வரும், தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினிடம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாழ்த்து பெற்றார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் கண் அசைவில் செயல்படுபவர்தான், தூத்துக்குடி எஸ்.ஜோயல். இளைஞரணி சார்பில் உதயநிதி என்ன நினைக்கிறாரோ அதை உடனடியாக செய்துகாட்டக்கூடியவர் ஜோயல்.
சமீபத்தில் கூட உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி,, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் வரிகளில்… பிரபல திரைப்பட பாடகர் மனோ குரலில்… “தலைவனே..! இளம்… தலைவனே..!” என்ற பாடலை இளைஞரணி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்தப் பாடல்தான் தற்போது தி.மு.க.வில் உள்ள இளைஞர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. பட்டி தொட்டியெங்கும் இந்தப் பாடல் வரிகள் அந்தளவிற்கு பிரபலமாகி வருகிறது.
இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து எஸ்.ஜோயல் கிறிஸ்துமஸ் வாழ்த்து பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.