தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தி வருகின்றனர். மாநில சுற்று சூழல் அணி சார்பில் ‘சிட்டுக் குருவிகளை பாதுகாப்போம்’ என்ற விழிப்புனர்வு நிகழ்ச்சிதான் அனைவரையும் வியக்க வைக்கும் விதமாக இருந்தது.
சென்னையில் நேற்று (6ம் தேதி) சென்னை ராயபுரத்தில் உள்ள தனலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆலடி அருணா அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில சுற்று சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா வரவேற்புரை ஆற்றினார்.
அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அமைச்சர் சேகர் பாபு பேசும்போது, ‘‘துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள சக்கா குதிரைகளை தனது சொந்த செலவில் பராமரித்து வருகிறார். இது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். எல்லோரும் ஆறு அறிவு ஜீவன்களுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வரும் நிலையில், சுற்று சூழலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்று சூழல் அணியின் சார்பில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா சிறிய சிட்டுக் குருவிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதுதான் மிகவும் வியக்கத்தக்க வகையில் இருக்கிறது’’ என்றார்.
அடுத்ததாக பேசிய முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, ‘‘திராவிட மாடல் முதல்வர் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக பல புதிய கொள்கைகளை வகுத்து வருகிறார். முக்கியமாக இரண்டு நாட்களுக்கு முன்பு “காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவின் இரண்டாவது கூட்டத்தில் பேசிய முதல்வர், ‘‘காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில், நம்மை தக்கவைத்து கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்காக, தமிழக பசுமை காலநிலை நிறுவனம், தமிழக காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம், தமிழக ஈரநில இயக்கம், தமிழக நெய்தல் மீட்சி இயக்கம் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இவைபோன்ற இயக்கங்கள், திட்டமிடுதல்கள் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்கப்படவில்லை. இந்த இயக்கங்களுக்கு கொள்கை வழிகாட்டவும், ஆலோசனைகள் வழங்கவும், காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவை, தமிழக அரசு உருவாக்கி உள்ளது’’ என்றார்.
கிராமங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்திட முதல் கட்டமாக 10 கிராமங்களை தேர்வு செய்து ‘பசுமை கிராமங்களாக’ உருவாக்கிட ‘முன்னோடி திட்டம்’ தொடங்கப்படும் எனவும், மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவத்தை அறிந்திட பசுமை கல்வி அறிமுகப்படுத்தவேண்டும் என பருநிலை மாற்றம் கூட்டத்தில் முதல்வர் அறிவறுத்தியது அவரது தொலைநோக்கு பார்வை கொண்ட உன்னத தலைவர் என்பதனை உணர்த்துகிறது.
எனவே, நமக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் பருவநிலை மாற்றத்தை தமிழக முதல்வரும், திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் அவர்கள் மிகவும் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறார். இந்த ‘முன்னோடித் திட்டம்’ இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமாக இருக்கும் என்றார்’’ பூங்கோதை ஆலடி அருணா.
உதயநிதியின் பிறந்த நாளையொட்டி மாநில சுற்று சூழல் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 14 பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த சாரண, சாரணீயர் மாணவர்கள் 1000 பேர் பங்கேற்றனர். இவர்கள் 2 மணி நேரத்தில் 1000 சிட்டுக்குருவி கூடுகளை உருவாக்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் மறு சுழற்சி செய்யப்பட்ட காகிதப் பையில் தின்பண்டங்கள், மற்றும் பழரசம் வழங்கப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்வை மாநில சுற்று சூழல் அணி மிகவும் வித்தியாசமாகவும், சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து வித்தியாசமாக நடத்தியதுதான் உடன்பிறப்புக்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
புதியவர்கள் வருகை, அரசியல் களம் ஆகியவற்றை கணக்கிட்டு உள்குத்து அரசியலில் ஈடுபடுபவர்களை ஓரங்கட்டிவிட்டு, கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே 2026ல் மீண்டும் ‘திராவிட மாடல் ஆட்சி’ அமையும் என்பதை உணர்ந்து தலைமை சில மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் உண்மையான உடன்பிறப்புக்களின் கோரிக்கையாக இருக்கிறது.