வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் உதயநிதி ஸ்டாலின், த.வெ.க. தலைவர் விஜய், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகிய மூவரை மையமாக வைத்தே சுழலும் என மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் மூவரும் கிரிக்கெட் ஆடுவது போல படத்தை வைத்து பதிவிட்டிருக்கிறார்.

2026 தேர்தல் களம் டி20 மேட்சைப் போல் இருக்கும் என்பதைத்தான் படத்தைப் போட்டு பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக தனது வலைதளப்பக்கத்தில் ‘‘#T20 ஆகும் T26’’ என்ற தலைப்பில், ‘‘விரைந்து உறுப்பினர்களை கோர்த்து அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்தின் கரங்களில் சேர்த்து…

முன் கூட்டியே தனக்கான பொதுச் சின்னத்தை பெற்றிடமுயற்சிக்க கூடும்…

அதற்கு இடையில் வரும் தேர்தல்களை “விடை”களாக்க தவெக களம் காணக்கூடும்…

காலத்தே களத்தில் இறங்கி மக்களை சந்தித்து 77-ன் நாயகனாகிட 69-ன் நாயகன் போராடுவதோடு “இலை”யையும்

என்.டி.ஏ. – “மலை”யையும் கடந்து உதயநிதிக்கு தான் தான் நேரடி போட்டி என்கிற அரசியல் சூழலை உருவாக்குவதே விஜய்யின் வியூகம் என்றால்…

எதிர்வரும் T26 இதுவரை தமிழகம் காணாத T20 தான் போ.. என்ன நாஞ் சொல்றது…?’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal