‘விழுப்புரம் மாவட்டத்தில் இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்’ என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிவாரணம் மற்றும் மீட்டு பணிகளை ஆய்வு செய்ய செல்லும் வழியில், கிழக்கு கடற்கரை சாலை, செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதியில் மழை மற்றும் புயல் காரணமாக சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்யும் இடத்தில் நடைபெற்ற பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து, விழுப்புரம் மந்தவாய்புதுக்குப்பம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவர், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ‘மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களின் கலெக்டர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட கலெக்டர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பெஞ்சல் புயலால், தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal