ஜாமீனில் வெளியான செந்தில் பாலாஜி அடுத்த நாளே அமைச்சராக பதவியேற்றது சர்ச்சையை கிளப்பியது. முதல்வரும் செந்தில் பாலாஜிக்கு காத்திருந்தது போல் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.
‘உச்சநீதிமன்றம் ஜாமீன் கொடுத்த மறுநாளே அமைச்சராக எதற்காக பதவியேற்றீர்கள்? அமைச்சராக உள்ளதால் சாட்சிகளுக்கு அழுத்தம் ஏற்படாதா?’’ என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளதால் அது விசாரணை பாதிக்கும் என மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.