நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி பள்ளியின் பெயரை அமைச்சர் அன்பில் மகேஷ் மாற்றி இருக்கிறர். தமிழகத்தில் இதுநாள் வரை பள்ளிக் கல்வித்துறைக்கு இப்படியொரு அமைச்சர் இருந்ததில்லை என தமிழகம் முழுவதிலும் இருந்து அமைச்சருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
பள்ளியின் பெயர் பலகையில் இருந்த அரிசன் காலணி என்ற பெயரை, கருப்பு மைக்கொண்டு தானே அழித்தார். இனி மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக அது விளங்கும் என்றார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில்,
‘‘நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி’ எனும் பெயரினை ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில் ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வெளியிட்டோம்.
தொடர்ந்து இன்று (நேற்று) மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று ‘அரிசன் காலனி’ எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினோம். இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் திரு.கணேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.
ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் திரு.ஜி.அன்பழகன் அவர்களிடம் ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அலைப்பேசி வாயிலாக தெரிவித்தோம். மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ – மு.க’’ என பதிவிட்டிருக்கிறார்.