வங்கக் கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதற்கு ‘ஃபெங்கால்’ என சவுதி அரேபியா பெயர் வைத்திருக்கிறது.
இதுகுறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது: ‘‘ வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தற்போது மாறியுள்ளது. இந்த நிலையில் இது நாளை புயலாக வலுபெற வாய்ப்புள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி புயலாக வலுப்பெற்றால் அதற்கு ஃபெங்கால் என பெயரிடப்படுகிறது. இந்த புயலானது மேற்கு வடமேற்கு பகுதியை நோக்கி நகரும். தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமானது நாகையிலிருந்து 590 கி.மீ. தூரத்திலும் புதுவையிலிருந்து 710 கி.மீ தூரத்திலும் சென்னையிலிருந்து 800 கி.மீ. தூரத்திலும் இது நிலைக் கொண்டுள்ளது. அது போல் இலங்கை – திரிகோணமலை அருகே 310 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தமானது மெதுவாக நகர்ந்து வருகிறது. அதாவது மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. இந்த ஃபெங்கால் என்ற பெயரை சவுதி அரேபியா வைத்துள்ளது.