பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்கப்படும் திருமணங்களே இன்றைக்கு பாதியில் ‘முறியும்’ நிலையில், ‘கண்ணில்லாத’ காதல் திருமணத்தால் இளம்ஜோடிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம்தான் வேதனை அடைய வைக்கிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஹேமா மற்றும் பிரசாந்த் ஆகியோர் காதலித்து வந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணமான இரண்டு மாதத்தில் இவர்கள் வாழ்வில் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத சம்பவம் நடந்துள்ளது. வாழ்க்கையை ஒரே நாளில் அடுத்தடுத்து முடித்துக் கொண்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டுர் பகுதியை சேர்ந்தவர் சமரசபாண்டி என்பவருடைய மகன் பிரகாஷ்(வயது23). இவர் பெண்களுக்கு குழுக்கள் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்தார். பிரகாஷும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள நீடூர் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மகள் ஹேமா (21) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு வீட்டில் பிரகாஷும், ஹேமாவும் தூங்கி கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலை பிரகாஷ் கண் விழித்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் அவருடைய மனைவி ஹேமா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் கூச்சலிட்டார். உடனே சம்பவ இடத்துக்கு சென்ற அக்கம்பக்கத்தினர் தூக்கில் இருந்து ஹேமாவை மீட்டார்கள்.

அப்போது திடீரென ஹேமா தூக்கில் தொங்கிய கயிறை எடுத்துக்கொண்டு அருகே இருந்த புளியமரத்துக்கு சென்ற பிரகாஷ் அங்கு அதே கயிற்றால் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் போலீசார் பிரகாஷ் மற்றும் ஹேமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரகாஷ்-ஹேமா உயிரைவிட்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த 2 மாதங்களில் கணவன்-மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தபகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதலிப்பது தவறில்லை.. திருமணத்திற்குப் பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலிப்பதுதான் வாழ்க்கையை வெற்றியடையச் செய்யும்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal