என் கட்டை கீழே விழும் வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. அப்போது, அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: ‘‘என்னை கேட்கிறார்கள் எப்படி சார் ஒரே தொகுதியில் வெற்றி பெறுகிறீர்கள் என்று, நான் தொகுதி என்று நினைக்கவில்லை. தொகுதியை கோவிலாக நினைக்கிறேன். ஓட்டு போடும் மக்களை தெய்வமாக நினைக்கிறேன். அதனால் தான் இந்த தொகுதியில் இத்தனை முறை வெற்றி பெற்றுள்ளேன்.

சட்டசபையில் கருணாநிதி 56 ஆண்டுகள் இருந்துள்ளார். அவருக்கு அடுத்து 53 ஆண்டுகள் சட்டசபையில் இருந்து வருகிறேன். என் கட்டை கீழே விழுகிற வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன். எங்களுக்கு எல்லாம் அதிக வேலை இருக்கிறது. டிவி காரங்க, 7ம் தேதி மழை பெய்யும் என சொல்கிறார்கள். பயங்கரமான மழை பெய்யும் என்று சொல்லிவிடுகிறார்கள்.

டிவியில் சொன்னதும் முதல்வர் ஸ்டாலின் தொகுதிக்கு போக சொல்கிறார். வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக, அலைந்து கொண்டு இருக்கிறோம். மற்ற தொகுதியுடன் ஒப்பிட்டு பாருங்கள்; மற்ற தொகுதிகளை விட நான் அதிக திட்டங்கள் கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal