நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் சீமானை சகோதரர் என்று அன்போடு அவர் அழைத்துள்ளார். சமீபத்தில் விஜயை, சீமான் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் இந்த வாழ்த்து என்பது தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். சீமானுக்கு இன்று பிறந்தநாள். சீமானின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் விஜயை, சீமான் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் இந்த வாழ்த்து என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக TVK Vijay எனும் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‘‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடந்த த.வெ.க. முதல் அரசியல் மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். இதனால் தமிழக அரசியலில் அனைவரின் கவனத்தையும் பெற்றார் விஜய். இந்த நிலையில்தான், விஜய்யின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கடுமையாக சீமான் விமர்சித்தார்.

சீமானின் விமர்சனத்தை தாண்டி நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பதுதான் தமிழக அரசியல் களத்தை அதிர வைத்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal