தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

இன்னும் ஒருசில நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட தயாராகும் மக்கள் அதற்கான பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர். சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள், சொந்த வாகனங்களில் தங்களின் பயணங்களை முடிவு செய்து ஊருக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில், தரையில் செல்லும் வாகனங்களை தவிர்த்து, ஆகாய மார்க்கமாக சொந்த ஊர்களில் கால் வைக்க பலர் திட்டமிட்டு உள்ளனர். அதற்கான விமான கட்டணங்கள் தான் அவர்களுக்கு அதிர்ச்சியை தரும் வகையில் உள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் கட்டணங்கள் மும்முடங்கு உயர்த்தப்பட்டுள்ளதே காரணம்.

சென்னை – மதுரை – ரூ.11,745 முதல் ரூ.17,749(ரூ.4,300)

சென்னை -தூத்துக்குடி – ரூ.8,976 முதல் ரூ. 13317 (ரூ. 4,109)

சென்னை – கோவை – ரூ. 7,872 முதல் ரூ. 13,428(ரூ.3,474)

சென்னை – சேலம் – ரூ. 8,353 முதல் ரூ.10,867 (ரூ.3,300)

சென்னை – புதுடில்லி – ரூ.5,802 முதல் ரூ.6,877(ரூ.5,475 )

திருவனந்தபுரம், பெங்களூரு, கொச்சி, கோல்கட்டா ஆகிய நகரங்களுக்கான விமான கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal