‘‘அண்ணா திமுக- நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்குமா என்ற யூகமான கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்க முடியாது’’ என்று அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் ‘‘அண்ணா திமுகவின் வாக்குகளை எந்த சூழ்நிலையிலும் நடிகர் விஜய்யால் ஈர்க்கவோ பிரிக்கவோ முடியாது; நடிகர் விஜய் எம்ஜிஆரை புகழ்ந்து பேசியதில் எந்த தவறும் இல்லை’’ என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.