2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக தொகுதி பார்வையாளர்களுடன் அக்டோபர் 28-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தொகுதி பார்வையாளர்களை நியமித்து திமுக தலைமைக் கழகம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக தொகுதி பார்வையாளர்களுடன் அக்.28-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இது தொடர்பாக கட்சி தலைமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;
‘‘திமுக தலைவர் தலைமையில், 2026-சட்டமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ள “சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்” வருகிற 28ம் தேதி காலை 11.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்’’ என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.