தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனவும் ஏமாற்றம் இருக்காது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதிக்கு சென்று பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் ‘‘ரொம்ப நாளாகவே அமைச்சரவை மாற்றம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உள்ளிட்ட பேச்சுக்கள் நிலவி வருகிறதே?’’ என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், தமிழக ‘‘அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது!’’ என பதிலளித்தார்.
மேலும், “கொளத்தூர் எனது சொந்த தொகுதி. நான் எப்போது வேண்டுமானாலும் இங்கு வருவேன். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விரிவான அறிக்கை கொடுத்துள்ளார். அமெரிக்க முதலீடுகள் குறித்து டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கை வெள்ளை அறிக்கை தான். அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை எப்படி இருந்தது என்பது நன்றாகவே தெரியும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” என தெரிவித்தார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த பிறகுதான் மாற்றம் இருக்குமோ…?