பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சினிமா தயாரிப்பாளரின் பெயரை வெளியே சொன்னால் அவரது பிள்ளைகள் கஷ்டப்படுவார்கள் என்று பாலிவுட் நடிகை பகீர் பேட்டி அளித்தார்.
திரைத்துறையில் பணியாற்றி வரும் நடிகைகள் பலர், தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பொதுவெளியில் பேசி வருவது அதிகரித்து வரும்நிலையில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷிண்டே அளித்த பேட்டியில், ‘கடந்த 1998-99ம் ஆண்டு வாக்கில், ஒரு திரைப்படத்தில் நடித்த போது, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் குறிப்பிட்ட ஆபாச ஆடையை கொடுத்து நடிக்க சொன்னார்.
ஆனால் அந்த ஆடையை அணிந்து நடிக்க சம்மதிக்கவில்லை. அப்போது அவர், ‘நான் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்’ என்று மிரட்டினார். ஒருகட்டத்தில் அவரை தள்ளிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியே ஓடிவிட்னேன். பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்கினார். அங்கிருந்த எனது பாதுகாப்பு ஊழியர்களை உதவிக்கு அழைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை; அவருடைய பெயரை வெளியே சொல்ல விரும்பவில்லை. அவருடைய குழந்தைகள் என்னைவிட சற்று இளையவர்களாக இருக்கலாம். அந்த தயாரிப்பாளரின் பெயரை நான் வௌியே சொன்னால், அவரது பிள்ளைகளும் கஷ்டப்படுவார்கள். சில வருடங்களுக்குப் பிறகு, நான் அவரை மீண்டும் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் அன்பாகப் பேசினார். எனக்கு ஒரு படத்தில் நடிக்கவும் வாய்ப்பளித்தார். ஆனால் அந்தப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்’ என்றார்.