அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதற்கு பதில் தனி நீதிபதி விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பிலும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இடைப்பட்ட காலத்தில் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது .