அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையை பேருந்து நிலையங்களில் திறந்துவைத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தற்போது, பொது இடங்களில் ‘மாதவிடாய் அறைகள்’ அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா வைத்த கோரிக்கை பெண்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழக மாநில சுற்றுச்சூழல் அணி “பதின்பருவ மகளீர் சூழிலியல் விழிப்புணர்வு மற்றும் விடாய் கால மறுபயனீடு பெட்டகம்” வழங்கிடும் நிகழ்ச்சி வடசென்னை இராயபுரத்தில் சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமயில், மாநிலசுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில்மாண்புமிகு தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திரு. கயல்விழி செல்வராஜ் விழா பேரூரை ஆற்றினார். வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா “இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பெண்களுக்கு இயல்பாக நடக்கக்கூடிய மாதவிடாய், periods room என்ற உடல் உறுப்பின் செயல் வெளியில. பேசக்கூடாத ,தவறான மூடநம்பிக்கைகள் நிறைந்த ஒருபிரச்னையாக கருதப்படுகிறது. ஒரு பெண்ணால் தன் உடலில் உள்ள இயற்கையை மாற்றத்தை தங்கள் பெற்றோலுமே பேச தயங்கும் போது போது எவ்வாறு அவர்களுக்கு ஒரு பாலியில் வன்கொடுமை சார்ந்த பிரச்னைகள ஏற்பட்டால் தைரியாக பேசுவார்கள்.

இத்தகைய மனத்தடையை போக்கவும், விடாய்கால சுகாதாரம் வாயிலாக எவ்வாறு அவர்களையும், பூமியை தாயையும் பாதுகாத்திடலாம் என்பதனை உணர்த்தவே மாண்புமிகு முதல்வர் கழகத்தலைவர் அவர்கள் வழிகாட்டுதலில் இந்தியாவிலேயே முதலாவதாக நடத்துகின்றோம் . முக்கியமாக நடுத்தர, இந்தியா போன்ற கீழ்-நடுத்தர, குறைந்த வருவாய் நாடுகளால் சரியாக மாதவிடாய் சுகாதாரத்தை அமுல்படுத்த முடியவில்லை.

நெகிழி பட்டைகள், சுத்தமற்ற துணிகள், தவறான பயன்பாட்டு முறைகள் , தண்ணீர், கழிப்பறை, குப்பை தொட்டிகள் போன்ற வசதியின்மை போன்ற காரணங்களால் பெண்களின் நலம், பூமித்தாயின் நலமும் பெரிதும் பாதிக்கப்படுகின்றது .
நெகிழி பட்டைகளால் நீர், நிலம், காற்று மாசுப்படுகிறது. இதனால் வயிற்று போக்கு, கல்லீரல் தொற்று, சரும பாதிப்பு , புற்று நோய் போன்ற வியாதிகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றது. அசுத்தமான துணி, சுகாதார பட்டையை குறைந்த பட்சம் 6 மணி நேர்த்தில் மாற்றாத காரணத்தால் சீறுநீர் தொற்று, சீறுநீரகங்கள் பாதிப்பு, கர்ப்பபைதொற்று குழந்தியின்மை போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கின்றது . மேலும் நெகிழி பட்டைகள் 3-5 ஆண்டுகளுக்கான செலவு 9300 – 15000 ரூபாய் அவரை செலவாகும்.
மறுப்பயனீடு துணி பட்டை மேற்கொள்காட்டிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுவது மட்டுமல்லாமல் 3-5 ஆண்டுகள் பயன்படுத்தப்படுத்தினால் ரூபாய் 2300&-2500 மட்டுமே தேவைப்படுகிறது. முத்தாய்ப்பாக இந்தியாவில் பருவம் அடைந்தவுடன் பள்ளி கல்வி இடைநிற்றல் 3-23% பல மாநிலங்களில உள்ளது.

மேலும் சுமார் 30% வளரிளம் பெண்கள் மாதவிடாய் நாட்களில் 3-5 நாட்கள் பள்ளிகளுக்கு செல்லாத்தால் அவர்கள் படிப்பில் பின்தங்கி உள்ளனர் என ஆய்வுகள் கூறுகின்றன.இந்நிகழ்ச்சி முதற்கட்டமாக கழகத்லைவர் மக்களின் முதல்வர் வழிகாட்டுதலின் அனைத்து மாவட்டங்களிலும் மாநில சுற்றுச்சுழல் அணி நடத்திடும்.

மேலும் ஆதி திராவிடநலத்துறை அமைச்சரிடம் அவர் துறை சார்ந்த பள்ளிகளில் மறுசுழற்சி சுகாதார பட்டை அறிமுகம் செய்திட வேண்டும், நெகிழி அல்லது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பள்ளிகளில் சிறப்பு சுகாதார பட்டை எரியூட்டிகளை அமைத்திட வேண்டும் எனகோரிக்கையையும் விடுத்தார். முத்தாய்ப்பாக எவ்வாறு பாலூட்டும் தாய்மார்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஒதுங்கும் அறைகள் இருப்பது போல பள்ளி, கல்லூரி, அலுவலக வளாகங்கள், இரயில், பேருந்து , விமான நிலையங்களில் “ மாதவிடாய் அறை” periods room” அறிமுகப்படுத்திட வேண்டும்’’ என நம் முதல்வர் அவர்களுக்கு இந்நிகழ்ச்சியின் வாயிலாக கோரிக்கையை முன் வைத்தார் டாக்டர். பூங்கோதை ஆலடி அருணா.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal