தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே ‘வார்த்தைப் போர்’ முற்றி ‘வாய்க்கு வந்தபடி’ இருதலைவர்களுமே (எடப்பாடி பழனிசாமி & அண்ணாமலை) மோதிக்கொள்கின்றனர்.
தரவி, அ.தி.மு.க.வில் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் அண்ணாமலையை ‘அரசியல் தற்குறி’ என்றெல்லாம் பேசி வருகின்றனர். பதிலுக்கு பா.ஜ.க.வில் கரு.நாகராஜனும் பதிலடி கொடுத்து வருகிறார்.
அண்ணாமலை லண்டன் சென்றாலும் அவர் வீசிய ‘வார்த்தைப் புயல்’ இன்னும் அடங்கவில்லை. இந்த ‘வார்த்தைப் போர்’ தொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்,,
‘‘எடப்பாடி தற்குறியே!’’ எனும் தலைப்பில் எழுதியுள்ள பதிவில், ‘‘அண்ணாமலையின்அரசியல் கருத்துகளுக்கு பதில் கூற தெரியாத எடப்பாடி…
அண்ணாமலையின்வயதை சுட்டிக்காட்டிவசைபாடுவது அறியாமையே…
மிஸ்டர் மடப்பாடி புரட்சித் தலைவி அம்மா…
36 வயதில் நேரடியாக அ.தி.மு.க.வில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகி அதே கட்சிக்கு…
அகவை நாற்பதுகளில் தமிழகத்தின் முதலமைச்சராக அரசாளவே வந்து விட்டார்கள்…
அதனால உயரங்களை எட்டிப்பிடிப்பதற்கு வயது ஒரு குறையல்ல தகுதி தான் முக்கியம்…
ஆக இந்த தன்கட்சியின் சொந்த வரலாறு தெரியாமலேயே அண்ணாமலை உழைக்காமல் வந்தவர்…
எம்.ஜி.ஆர். முதல்முறை முதலமைச்சராக முடிசூடுகிற போதுதான் அண்ணாமலையே பிறந்தார் என்றெல்லாம் எடப்பாடி நடத்துகிற கதாகாலட்சேபம்…
கேட்கவும் ரசிக்கவும் முடியாத கூமுட்டைத்தனத்தின் மொத்தம் அல்லவா…?-என்ன நாஞ் சொல்றது..!’’ என்று அந்த பதில் பதிவிட்டிருக்கிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியின் முடிவால் அ.தி.மு.க.வில் சிலம் எம்.பி.யாகும் கனவு கானல் நீரானது. தற்போது அவர் பதவியை காப்பாற்றிக்கொள்ளவும், கட்சியை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும் எடுக்கும் முடிவு அ.தி.மு.க.வை அதல பாதாளத்தில் கொண்டு செல்லும் என்பதைத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அறிக்கை எழுதி கொடுத்த மருது அழகுராஜ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.