நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் கேரள திரையுலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. முன்னணி பிரபல நடிகர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், நடிகை ஆஷா சரத் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தில் தான் நடித்த போது நடிகர் சித்திக் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சில வதந்திகள் பரவி வந்த நிலையில் அதை மறுத்து ஆஷா சரத் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு ஹேமா அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாளத் திரை உலகமே அதிர்ந்து போய் இருக்கிறது. மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து ஹேமா அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டி இருந்த நிலையில் பல நடிகைகள் தங்களுக்கு தொந்தரவு கொடுத்த பிரபலங்கள் குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.
மலையாள நடிகையான ஆஷா குறித்து சில செய்திகள் பரவி வந்தது. அதாவது ஆஷா சரத் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சித்திக் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறியதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால் இதை ஆஷா மறுத்திருக்கிறார். அது பற்றி ஆஷா சரத் பேசுகையில் சித்திக் கலைத்துறையில் எனக்கு மரியாதைக்குரிய சக ஊழியர் மற்றும் நல்ல நண்பர்.
சித்திக்கு என்னிடம் தவறான அர்த்தத்தில் என்னிடம் பேசவோ அல்லது தவறான செயல்களில் என்னிடம் அத்து மீரவோ இல்லை. சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இந்த மாதிரி வதந்திகளை பரப்புபவர்கள் அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தயவு செய்து இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எல்லோரும் தவிர்த்து விடுங்கள் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
அதோடு மலையாள திரை உலகம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் ஒரு பெரிய கலைக் குடும்பமாக வளர வேண்டும். விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதேனும் நடந்தாலோ அல்லது வெளிப்பட்டாலோ அவற்றை முளையிலேயே நசுக்க வேண்டும். பொய்யான தகவல்களை பரப்பி ஆதாயம் தேடுபவர்களை அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் அதில் வலியுறுத்தி இருக்கிறார்.
அதோடு வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆஷா தெரிவித்திருக்கிறார். பொதுவாக திரைப்படத்துறையில் அமைதியான மற்றும் நேர்மையான சூழல் தேவை. கலை மீது ஆர்வமும் திறமையும் உள்ள எவரும் அமைதி மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலையில்தான் பணியாற்ற முடியும். கேரளாவில் உள்ள அரசாங்கமும் கலையை நேசிக்கும் சமூகமும் அத்தகைய சூழலை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படும் என்று நான் நம்புகிறேன் என்று ஆஷா சரத் கூறி இருக்கிறார்.
தமிழில் ‘ஹிட்’ கொடுத்த ‘பாபநாசம்’ நடிகைக்கு பாலில் தொல்லை கொடுத்ததாக பரவிய தகவல்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.