‘‘ முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்ற சமயத்தில் ஆட்சியைக் கவிழ்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் பா.ஜ.க.விற்கு தி.மு.க. கூஜா தூக்குகிறது’’ எனவும், ‘‘ கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது’’ எனவும் அ.தி.மு.க. செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியிருக்கிறார்.

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் அதிமுக எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இந்த செயற்கு குழு கூட்டத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும், போதுமான நிதியை ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சட்ட விதிப்படி ஆறு மாதத்துக்கு ஒரு முறை செயற்குழு கூட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்குழு கூட்டப்பட்டதாகவும்,2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வு காரணமாக பல தொழிற்சாலைகள் மூடும் நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில் வெளி நாடுகளில் முதலீடு ஈர்க்க முதலமைச்சர் செல்கிறார். முதலமைச்சர் வெளிநாடு பயணங்கள் மூலமும், திமுக ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு, எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது, எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டோம். இதுவரை வெளியிடவில்லை என தெரிவித்தார்.

கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது என தெரிவித்தவர்,. கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் அழைத்த அரசு, ஏன் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கவில்லை என கேள்வி எழுப்பியனார். இதன் மூலம் திமுக பாஜக இடையே ரகசிய கள்ள உறவு உள்ளது நிரூபணம் ஆகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் நேரத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் தான் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு செல்வது, ராஜ்நாத் சிங்கை அழைப்பது என பாஜகவுக்கு கூஜா தூக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என விமர்சித்தார். திமுக கூட்டணி கட்சி புறக்கணித்த நிலையில், காலையில் திமுக புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு அரசு சார்பில் கலந்து கொள்வோம் என அறிவிக்கிறார்கள். ஸ்டாலின் வேறு திமுக வேறா என கேள்வி எழுப்பிய அவர், ஏன் எட்டு அமைச்சர்கள் வரிந்து கட்டிக் கொண்டு தேநீர் விருந்துக்கு சென்றார்கள் என கேள்வி எழுப்பினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal