காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாகவும் (செப்.,18,25, அக்.,01) , ஹரியானா சட்டசபைக்கு அக்.,01 ல் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநிலங்களிலும் அக்., 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு வரும் செப்., மாதத்திற்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அம்மாநிலத்திற்கான சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகு முதல்முறையாக தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல், 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி அம்மாநிலத்திற்கும் தேர்தல் நடக்கிறது. இதன்படி தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் டில்லியில் நிருபர்களை சந்தித்த ராஜிவ் குமார் கூறியதாவது:காஷ்மீர், ஹரியானாவில் அனைவரையும் ஓட்டுப்போட வைப்பதே எங்களின் இலக்கு. காஷ்மீரில் விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என கட்சிகள் கோரிக்கை வைத்தன. அங்கு 87 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 3.71 லட்சம் பேர் முதல்முறையாக ஓட்டுப்போட உள்ளனர்.11,838 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. லோக்சபா தேர்தலில் அதிகளவு ஓட்டு பதிவானது. இது தேர்தல் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை காட்டுகிறது. துப்பாக்கியை விட ஓட்டுச்சீட்டை மக்கள் தேர்வு செய்துள்ளனர். ஹரியானாவில் 2.91 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும்.முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்.,18லும்2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்., 25லும்3ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.,1லும் தேர்தல் நடைபெறும்.

ஹரியானா சட்டசபைக்குஒரே கட்டமாக அக்.,01ல் தேர்தல் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் அக்., 04ல் எண்ணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal