தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் படமாக, பொன்னியின் செல்வன் 1 படம் தேர்வு செய்யப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று டில்லியில் அறிவிக்கப்பட்டன.
- சிறந்த அனிமேஷன் படமாக ‘ஏ கோகனட் ட்ரீ’ தேர்வு
- சிறந்த திரைப்பட புத்தகமாக கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் தேர்வு
- சிறந்த தமிழ் படமாக பொன்னியின் செல்வன் 1 தேர்வு
- சிறந்த சண்டை பயிற்சியாளர் அன்பறிவு
- சிறந்த இசை அமைப்பாளர் சிவா, ஏ.ஆர்.ரஹ்மான் (பின்னணி இசை) தேர்வு
- சிறந்த நடிகைக்கான தேசிய விருது, திருச்சிற்றம்பலம் படத்தின் நாயகி நித்யா மேனனுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது ரவி வர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்துக்கு மட்டும் 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த பொழுதுபோக்கு படமாக காந்தாரா தேர்வு
பிரம்மாஸ்திரா படத்துக்காக கேசரியா பாடலை பாடிய அர்ஜித் சிங்குக்கு தேசிய விருது
சிறந்த கன்னட மொழி படத்துக்கான விருது கே.ஜி.எப்., 2 வழங்கப்படுகிறது
சிறந்த படமாக ஆட்டம் படத்திற்கு தேசிய விருது
சிறந்த நடிகர்- ரிஷப் ஷெட்டி
திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் மேகம் கருக்காதா பாடலுக்காக சிறந்த நடனத்திற்கான தேசிய விருது- நடன இயக்குனர்கள் ஜானி, சதீஷ் விருதுக்கு தேர்வு