திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்லும் பெண்ணை, அக்குடும்பத்தார் மருமகள் என்றுதான் அழைப்பார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை மருமகளை மகளாக பார்ப்பதுதான் வழக்கம். ஆனால், சென்னையில் மருமகளை மாமனார் ‘அடைய’ துடித்த விவகாரம்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ஆழ்வார்திருநகர் மீனாட்சி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், 21 வயது பெண்ணை காதலித்து வந்தார்.. பிறகு, 4 வருடங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இப்போது இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.. தற்போது, ஆழ்வார்திருநகர் திருவள்ளுவர் சாலையில், ஒரு வீட்டில் இந்த தம்பதியினர் வாடகைக்கு இருந்து வருகிறார்கள். இளைஞர் பெயிண்ட்டர் வேலை பார்த்து வருகிறார்.. அதனால், காலையிலேயே வேலைக்கு சென்றுவிட்டால், சாயங்காலம்தான் வீட்டுக்கு வருவார்.. ஆனால், திருமணமான நாளில் இருந்தே, மருமகள் மீது, மாமனார் சரவணனுக்கு ஒரு கண் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. மாமனாரும் பெயிண்ட்டர் வேலைதான் செய்து வருகிறார் என்றாலும், தனியாக வீட்டில் இருக்கும் நேரங்களில் மருமகளை தப்பான எண்ணத்துடனும் பார்த்து வந்தாராம்.

இப்படித்தான் நேற்று முன்தினமும், 2 வயது குழந்தையுடன் மருமகள் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மாமனார் திடீரென கடைக்கு சென்று, ஆசிட் பாட்டில், பிளேடு போன்றவற்றை வாங்கிக்கொண்டு மருமகள் வீட்டுக்குள் நுழைந்தாராம்.. பிறகு, கதவையும் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, மருமகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளர்.. இதனால் கடுமையான அதிர்ச்சி அடைந்த மருமகள், மாமனாரிடமிருந்து தப்ப முயன்றுள்ளார்.

உடனே மாமனார், கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட், பிளேடை எடுத்துகாட்டி மிரட்டியிருக்கிறார்.. தான் சொல்லும்படி நடக்காவிட்டால், ஆசிட்டை ஊற்றி, பிளேடால் வெட்டிவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.. அத்துடன், பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இறுதியில் விஷயம் கோயம்பேடு மகளிர் ஸ்டேஷன் வரை போய்விட்டது. மருமகளை சீரழித்த மாமனார் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இப்போது மாமனார் ஜெயிலில் உள்ளார். மருமகள் என்றும் பாராமல், பிளேடு, ஆசிட்டை வைத்து மிரட்டி, கொடூரமாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal