குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா, சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் மத்திய மாநில அரசு அதிகாரிகள் உட்பட 27 பேர் செப்டம்பர் 9ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.