‘‘நிதி ஆயோக் குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை போல ஒரு மாயத் தோற்றத்தை ஸ்டாலின் உருவாக்குகிறார்’’ என அ.தி.மு.க.மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு சில குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தற்போது நிதி ஆயோக் வெளியிட்ட தகவலில் கடந்த எடப்பாடியார் ஆட்சியோடு தற்போது விடியா திமுக ஆட்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகம் பின்நோக்கி தான் உள்ளது. குறிப்பாக எடப்பாடியார் ஆட்சியின் 2020,2021 ஆண்டின் குறியீட்டையும், தற்பொழுது விடியா திமுக அரசின் 2023 ,2024 குறியீட்டையும் எடுத்து வெளியிட்டுள்ளார்கள் குறிப்பாக எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட குறியீட்டில் அப்போது கொரோனா என்பது குறிப்பிடத்தக்கது

எடப்பாடியார் ஆட்சியில் ஒரு லட்சம் நபர்களுக்கு தற்கொலை விகதத்தில் 17.8 சதவீதம் இருந்தது, தற்போது திமுக ஆட்சியில் 25.9 சகவீதமாக உயர்ந்து விட்டது.சாலை விபத்தை எடுத்துக் கொண்டால் எடப்பாடியார் ஆட்சியில் 13.88 சகவீதம் இருந்தது தற்போது திமுக ஆட்சியில் 23.09 சதவீதமாக உயர்ந்து விட்டது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணித பாடம் திறன் குறைவு எடுத்துக் கொண்டால் எடப்பாடியார் ஆட்சியில் 67 சதவீதம் இருந்தது, தற்பொழுது 71.3 சகவீதமாக உயர்ந்துவிட்டது.

உயர் கல்வி சேர்க்கையில் எடப்பாடியார் ஆட்சியில் 49 சதவீதமாக இருந்தது அதனைத் தொடர்ந்து 2021 ஆண்டின் முடிவில் 51 சதவீதமாக உயர்ந்து இருந்தது தற்போது திமுக ஆட்சியில் 47 சதவீதமாக குறைந்துவிட்டது .

தொழில் துறையில் புதிய கண்டுபிடிப்பு திறன் எடப்பாடியார் ஆட்சியில் 37.95 சகவீதமாக இருந்தது தற்போது திமுக ஆட்சியில் 15.69 சதவீதமாக பாதி அளவில் குறைந்து விட்டது. பட்டியலின மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பான இருந்தோம் என்று ஸ்டாலின் கூறுகிறார் ஆனால் எடப்பாடியார் ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரு லட்சம் நபர்களுக்கு 7.9 சகவீதம் இருந்தது, தற்போது திமுக ஆட்சியில் 12.2 சகவீதமாக உயர்ந்துவிட்டது.

மலைவாழ் மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரு லட்சம் நபர்களுக்கு எடப்பாடியார் ஆட்சியில் 3.9 சகவீதமாக இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் 8.4 சதவீதமாக உயர்ந்து விட்டது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஒரு லட்சம் நபர்களுக்கு எடப்பாடியார் ஆட்சியில் 20.37 சகவீதம் இருந்தது. தற்பொழுது திமுக ஆட்சியில் 33.93 சகவீதமாக உயர்ந்துள்ளது. குழந்தைகள் காணாமல் போவது எடப்பாடியார் ஆட்சியில் 22.37 சகவீதம் இருந்தது தற்போது 33.93 சதவீதமாக உயர்ந்து விட்டது.

அதேபோல் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஆயோக் அறிக்கையில் தேசிய சராசரியை ஒப்பிட்டு, அதில் தமிழகம் தேசிய சராசரி காட்டிலும் அதிக மதிப்பீடு பெற்றதாக விளம்பரபடுத்தி வருகிறார் ஆனால் உண்மை என்னவென்றால் தேசிய சராசரியை காட்டிலும் மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை காட்டிலும் மதிப்பீட்டை அதிமாக பெற்று முதலிடத்தில் உள்ளதை மறைத்து விட்டார்.

பசிப்பிணி அகற்றல்

தேசிய சராசரி 52 சகவீதம் தான் ஆனால் தமிழகம் 75 சகவீதம் பெற்றதாக கூறுகிறார். ஆனால் இதே கேரளாவில் எடுத்துக் கொண்டால் 84 சதவீதம் ,பஞ்சாப் 83 சதவீதம், அருணாச்சல பிரதேசம் 81 சகவீதம், மணிப்பூர் 77 சதவீதம், சிக்கிம் 77 சகவீதம், மிசோரம் 76 சகவீதம், அரியானா 75 சகவீதம் என்று மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் ஆறாவது இடத்தில் தான் உள்ளது. தரமான கல்வியில் தேசிய சராசரி 61 சகவீதம் இதில் தமிழ்நாடு 76 சகவீதம் என்று ஒப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் எடுத்துக் கொண்டால் 82 சகவீதம், ஹரியானா 77 சகவீதம், இமாச்சலப் பிரதேசம் 77 சகவீதம் அதற்கு பின்பு தான் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.

தூய்மையான குடிநீர்

தேசிய சராசரி 89 சகவீதம்,ஆனால் தமிழ்நாடு 89 சகவீதம் பெற்றதாக கூறப்படுகிறது ஆனால் கோவா எடுத்துக் கொண்டால் 100 சகவீதம், இமாச்சலப் பிரதேசம் 99 சகவீதம், பீகார் 98 சதவீதம், சிக்கிம் 97 சதவீதம், மிசோரம் 94 சதவீதம், உத்தரகாண்ட் 94 சதவீதம், சதீஸ்கர் 93 சதவீதம், மகாராஷ்டிரா 93 சதவீதம், உத்திரபிரதேசம் 93 சதவீதம், ஆந்திரா 91 சகவீதம்,கர்நாடகா 90 சகவீதம் என தமிழ்நாடு 9 வது இடத்தில் தான் உள்ளது.

சுகாதாரம் மற்றும் மக்கள் நலன்

தேசிய சராசரி 77 சதவீதம் தான் ஆனால் தமிழகம் 77சகவீதம் பெற்றதாக என்று கூறுகிறது ஆனால் குஜராத் எடுத்துக் கொண்டால் 90 சதவீதம், மகாராஷ்டிரா 84 சதவீதம், உத்தரகாண்ட் 84 சதவீதம், இமாச்சலப் பிரதேசம் 83 சதவீதம், கர்நாடகா 80 சதவீதம், கேரளா 80 சதவீதம், கோவா 79 சதவீதம், பஞ்சாப் 79 சகவீதம், திரிபுரா 79 சகவீதம், மேற்கு வங்காளம் 79 சகவீதம், ஆந்திரா 78 சகவீதம், ஜார்கண்ட் 77 சகவீதம், இதில் தமிழ்நாடு 7 இடத்தில் தான் உள்ளது.

அமைதி காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்கள்

தேசிய சராசரி 74 சதவீதம் இதில் தமிழகம் 74 சகவீதம் என்று கூறப்படுகிறது. ஆனால் குஜராத் எடுத்துக் கொண்டால் 87 சகவீதம், இமாச்சலப் பிரதேசம் 85 சகவீதம், மிசோரம் 84 சதவீதம், கோவா 83 சதவீதம், கேரளா 82 சகவீதம், திரிபுரா 82 சகவீதம்,மேற்கு வங்காளம் 82 சகவீதம், கர்நாடகா 81 சதவீதம், பஞ்சாப் 81 சகவீதம், உத்தரகாண்ட் 81 சகவீதம், சிக்கிம் 80 சதவீதம், அருணாச்சலப்பிரதேசம் 79 சதவீதம், தமிழ்நாடு 74 சகவீதம் என தமிழகம் 9வது இடத்தில் உள்ளது.

உற்பத்தி மற்றும் நுகர்வு

தேசிய சராசரி 78 சகவீதம் உள்ளது இதில் தமிழகம் 78 சகவீதம் என கூறப்பட்டுள்ளது. இதில் திரிபுரா எடுத்துக் கொண்டால் 99 சகவீதம், சதீஸ்கர் 95 சகவீதம், மேற்கு வங்காளம் 94 சதவீதம் ,ஆந்திரா 93 சதவீதம், மத்திய பிரதேசம் 92 சகவீதம், அருணாச்சல பிரதேசம் 90 சதவீதம், ராஜஸ்தான் 89 சகவீதம், உத்தரகாண்ட் 86 சகவீதம்,கர்நாடகா 85 சகவீதம், ஒடிசா 85 சகவீதம், உத்தரபிரதேசம் 85 சகவீதம், இமாச்சலப் பிரதேசம் 78 சகவீதம் இதில் தமிழ்நாடு 10வது இடத்தில் உள்ளது.

நிலத்தில் வாழ்க்கை குறியீட்டில்

தேசிய சராசரி 75 சதவீதம் இதில் தமிழகம் 72 வது இடத்தில் பின்னோக்கி உள்ளது .இதில் ஜார்கண்ட் மாநிலம் 95 சகவீதம், திரிபுரா 95 சதவீதம், உத்தரகாண்ட் 94 சதவீதம்,அஸ்ஸாம் 91 சகவீதம், மேற்கு வங்காளம் 91சகவீதம், மத்திய பிரதேசம் 90 சகவீதம் ,கேரளா 88 சதவீதம், மணிப்பூர் 83 சகவீதம், தெலுங்கானா 82 சகவீதம், அருணாச்சலப்பிரதேசம் 80 சகவீதம்,கோவா 79 சகவீதம், சதீஸ்கர் 78 சகவீதம், இமாச்சலபிரதேஷம் 78 சகவீதம், ஆந்திரா 77 சதவீதம், குஜராத் 76 சதவீதம், ஒடிசா 76 சதவீதம், நாகாலாந்து 74 சதவீதம், பீகார் 73 சகவீதம், சிக்கீம் 72 சகவீதம் தமிழ்நாடு 15 இடத்தில் பின்னோக்கி உள்ளது.

நிலையான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டு

தேசிய சராசரி 83 சதவீதம் இது தமிழ்நாடு 81சகவீதம் பெற்று பின்னோக்கி உள்ளது. இதில் மகாராஷ்டிரா 98 சதவீதம் ,குஜராத் 94 சதவீதம்,பஞ்சாப் 94 சதவீதம், உத்தரகாண்ட் 89 சகவீதம், சிக்கிம் 88 சதவீதம், ஹரியானா 86 சதவீதம், மத்திய பிரதேசம் 86 சகவீதம், தெலுங்கானா 86 சதவீதம், ஆந்திரா 85 சகவீதம்,கர்நாடகா 85 சதவீதம், கேரளா 84 சதவீதம், மணிப்பூர் 83 சதவீதம், உத்தர பிரதேஷ் 82 சதவீதம் என தமிழகம் 10வது இடத்தில் பின்னோக்கி உள்ளது.

பாலின சமத்துவம்

தேசிய சராசரி 49 சதவீதம் தமிழகம் 53 சகவீதமாக உள்ளது இதில் நாகலாந்து 74 சகவீதம், மிசோரம் 69 சகவீதம், கேரளா 66 சகவீதம்,சிக்கிம் 65 சதவீதம், இமாச்சலப்பிரதேசம் 62 சகவீதம், கோவா 61 சகவீதம், மேகாலயா 58 சதவீதம், உத்தரகாண்ட் 56 சகவீதம், அருணாச்சல பிரதேஷ் 54 சகவீதம், மகாராஷ்டிரா 53 சதவீதம் இதில் தமிழகம் 10 வது இடத்தில் உள்ளது.

பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலை வாய்ப்பு

தேசிய சராசரி 68 சதவீதம் இதில் தமிழ்நாடு 81 சகவீதம் உள்ளது இமாச்சலப் பிரதேசம் 88 சதவீதம், கர்நாடகா 86 சதவீதம், சிக்கிம் 84 சதவீதம், தெலுங்கானா 84 சதவீதம், மிசோரம் 81 சகவீதம் இதில் தமிழகம் 4 வது இடத்தில் உள்ளது.

தொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்ட வசதிகள்

தேசிய சராசரி 61 சகவீதம் இதில் தமிழகம் 67 சகவீதம் உள்ளது கோவா 76 சகவீதம், அரியானா 72 சகவீதம், கேரளா 69 சகவீதம் பஞ்சாப் 69 சகவீதம்,இதில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.

சமத்துவமின்மையை குறைத்தல்

தேசிய சராசரி 65 சகவீதம் தமிழ்நாடு 76 சதவீதம் உள்ளது கோவா 87 சதவீதம், இமாச்சலப் பிரதேசம் 80 சதவீதம், சிக்கிம் 80 சதவீதம், மணிப்பூர் 79 சதவீதம், மேகாலயா 77 சதவீதம், பஞ்சாப் 77 சகவீதம், திரிபுரா 77 சகவீதம் இதில் தமிழகம் 5 வது இடத்தில் உள்ளது. விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த திமுக அரசு தற்போது நிதி ஆயோக் குறியீட்டில் தமிழகத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார் ஸ்டாவின் மக்கள் அதை நம்ப மாட்டார்கள்’’ என கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal