நாடாளுமன்றத்தில் எம்பிக்களாக பதவி ஏற்ற திமுக எம்பிக்கள், வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்- வேண்டாம் நீட்! BAN நீட் என என்று முழக்கமிட்டனர். இப்படி இருக்க ஒரு எம்பி மட்டும் கனிமொழி வாழ்க என்று முழக்கமிட்டார்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியுடன் சேர்த்து 40 இடங்களில் வென்றுள்ளது. பாஜக, அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. கடந்த இரண்டு நாட்களாக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்று வருகின்றனர்.

இன்று மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட புத்தகத்துடன், தமிழில் தமிழ்நாடு எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். வடமாநில எம்பிக்கள் இந்தியில் பதவி ஏற்ற போது, நாடாளுமன்றத்தில் தமிழில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் உறுதிமொழி எடுத்தனர். முக்கியமாக, திமுக எம்பி தயாநிதி மாறன், வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! BAN நீட் என முழக்கமிட்டார். திமுக எம்பிக்கள் பெரும்பாலும் வருங்காலம் எங்கள் உதயநிதி என முழக்கமிட்டனர்.

கடந்த முறை திமுக எம்பிக்கள் வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர், என்று முழக்கமிட்டனர். இந்த முறை கூடுதலாக வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! ஙிகிழி நீட் என முழக்கமிட்டு உள்ளனர்.

கடந்த முறை திமுக எம்பிக்கள் வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர், என்று முழக்கமிட்டனர். இந்த முறை கூடுதலாக வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! ஙிகிழி நீட் என முழக்கமிட்டு உள்ளனர்.

திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை தமிழில் பதவியேற்றார். வாழ்க தமிழ்! கருணாநிதி- ஸ்டாலின் – உதயநிதி – பொதுப்பணித்துறை அமைச்சர் (எ.வ.வேலு) வாழ்க என முழக்கமிட்டார் திமுக எம்பி அண்ணாதுரை. திருவள்ளூர் தொகுதி எம்பி சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்றார். வாழிய வையகம்! வாழ்க தமிழ்! தலித்- ஆதிவாசிகள்- சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக என முழக்கமிட்டார் சசிகாந்த் செந்தில். மேலும், திமுக எம்பி கலாநிதி வீராசாமி, பெரியார் அண்ணா, கலைஞர் வாழ்க! திராவிடம் வாழ தளபதி வாழ்க! தமிழ் வெல்க! என முழக்கமிட்டார் . ஆரணி எம்பி தரணிவேந்தன், கருணாநிதி- ஸ்டாலின், உதயநிதி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க என முழக்கமிட்டார்.

தங்க தமிழ்ச்செல்வன் எம்பி எந்த முழக்கமும் எழுப்பவில்லை , ஆனால் சட்டப்பையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் படத்தை சபையில் எடுத்து காட்டினார். முரசொலி எம்பி தமிழில் பதவியேற்றார். அப்போது கருணாநிதி- ஸ்டாலின்- உதயநிதி வாழ்க என்றார். காவிரி நீரை திறக்க வலியுறுத்தி முழக்கமிட்டார்.

இப்படி இருக்க ஒரு எம்பி மட்டும் கனிமொழி வாழ்க என்று முழக்கமிட்டார். தென்காசி எம்பி டாக்டர் ராணி குமார் கனிமொழி வாழ்க என பதவியேற்றார். எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் வாழ்க என முழக்கமிட்டார் ராணி குமார். திமுக எம்பி ராணி தென்காசியில் 425,679 வாக்குகள் பெற்று வென்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய தமிழகம் – அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 229480 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்த நிலையில் இன்று லோக்சபாவில் . தென்காசி எம்பி டாக்டர் ராணி குமார் கனிமொழி பெயரை சொல்லி பதவியேற்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal