அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.

அதிலும் இந்த முறை அதிமுக அதிக இடங்களில் டெபாசிட் இழந்து உள்ளது. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது அதிமுக.9 தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும் சென்றுள்ளது. மேலும் 3 தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது.

2024 லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. அதிமுகவின் தோல்விக்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.

  • அதிமுக கட்சி பல விதமாக பிரிந்தது. ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு தென் மண்டலங்களில் , டெல்டாவில் வாக்குகளை பிரிக்கின்றனர். இவர்களை இணைக்க வேண்டும்.
  • அதிமுகவில் வேட்பாளர் தேர்வு சொதப்பல். பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்களுக்கே தெரியாதவர்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். சில இடங்களில் வெளியூர் ஆட்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். கல்லை கூட ஜெயிக்க வைக்க எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா இல்லையே. (சீனியர்களை வேட்பாளராக எடப்பாடியால் அறிவிக்க முடியாததும் ஒரு காரணம்)
  • அதிமுகவில் நிர்வாகிகளே பெரிதாக வேலை செய்யவில்லை. பெரிதாக தேர்தலுக்காக களமிறங்கி பணிகளை செய்யவில்லை. பல ஒன்றியச் செயலாளர்கள் எதிர்தரப்பிடம் விலைபோய்விட்டார்கள்.
  • பொதுவாக நாடாளுமன்ற தேர்தல் மத்தியில் ஆட்சியை தேர்வு செய்வது. அப்படி இருக்க பிரதமர் வேட்பாளர் இல்லாமல் அதிமுக வாக்கு கேட்டதை தமிழக மக்கள் ரசிக்கவில்லை.
  • கூட்டணி விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமி கோட்டை விட்டது.
  • எடப்பாடியின் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை. அவரின் பிரச்சாரம் பெரிதாக
  • கட்சியில் தேர்தல் செலவிற்கான பணம் கூட சரியாக செலவாகவில்லை. நிர்வாகிகள் மூலம் பணம் பெரிய அளவில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
  • கட்சி நிர்வாகிகள் கிரவுண்டு வேலை செய்யவில்லை என்று எடப்பாடியே கட்சி மீட்டிங்கில் சொல்லி இருந்தார். அது களத்திலும் நடந்தது.
  • சில இடங்களில் முதல்முறையாக அதிமுக பூத் கமிட்டியை கூட இழந்துள்ளது. இதுவும் தோல்விக்கு காரணம்.
  • அதிமுகவில் தலைமைக்கு பெரிய பவர் இல்லை. நிறைய கிளை பவர் சென்டர்கள் இருப்பதால் தலைமையின் உத்தரவிற்கு பயம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. பெரம்பலூர் தொகுதி நிர்வாகிகள் தங்கமணி இருக்க பயம் ஏன் என்கின்றனர். இன்னு சிலரோ ‘இளங்கோவன் இருக்க பயம் ஏன்?’ என எடப்பாடிக்கு பயப்பாடல் வேலை பார்த்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

வரும் காலத்திலும் சரி செய்யாமல் இருந்தால், ‘எனக்குப் பிறகும் 100 ஆண்டுகாலம் அ.தி.மு.க. இருக்கும்’ என்று ஜெயலலிதா சொன்னது பொய்த்துப் போய்விடும்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal