சென்னையில் உரிமம் பெறாத மசாஜ் சென்டர்களில் துணை நடிகைகள், குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் என ‘பார்ட் டைம்’ வேலை பார்ப்தாக அதிர்ச்சி வீடியோ வெளியாகியிருக்கிறது.

தமிழகமெங்கும் உரிமம் பெறாத மசாஜ் சென்டர்களில் போலீசார் கண்காணித்தபடியே உள்ளனர்.. இதுபோன்ற மசாஜ் சென்டர்களில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் அட்டூழியங்கள் நடப்பதாக அடிக்கடி போலீசாருக்கு தகவல்கள் வருவதால், போலீசாரும் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

பாலியல் சம்பவங்கள் ஈடுபடுவதாக தெரிந்தால், சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டர் ஓனர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் வருகிறார்கள்.. சட்ட விரோதமாக செயல்படும் மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைத்தும் வருகிறார்கள். குறிப்பாக சென்னையில் இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களில் போலீசார் சோதனை நடத்தி, அங்கிருந்த வீடியோ பதிவுகளையும் கைப்பற்றியிருக்கிறார்களாம்.

இந்த வீடியோக்களை ஆய்வு செய்த போலீஸார், பல சினிமா துணை நடிகைகள், குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் போன்றோரும் வீடியோவில் இடம்பெற்றிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்கள். இந்த நடிகைகள் எல்லாம், மசாஜ் சென்டர்களில் “பார்ட் – டைம்” வேலைக்கு சேர்ந்துள்ளனர்.. அதேபோல, குடும்ப பெண்கள்,. கல்லூரி மாணவிகளும் பணத்துக்காக இங்கு வந்து பணியாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.. மசாஜ் சென்டர்களில் வரும் இளைஞர்களுக்கு எண்ணெய் தேய்த்து விட்டு மசாஜ் செய்து வந்துள்ளது, அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறதாம்.

இதற்காக, முன்கூட்டியே வாட்ஸ் அப்களில், மெசேஜ்கள் அனுப்புவார்களாம்.. “அழகான பெண்கள் உங்களுக்கு மசாஜ் செய்ய காத்திருக்கிறார்கள். சீக்கிரமாக வரவும்” என்று அந்த மெசேஜ் விளம்பரத்தில் தெரிவிக்கபபட்டிருக்கும்.. “சலுகை விலையில் நிறைவான மசாஜ்” என்கிற பெயரிலும் கஸ்டமர்களை இவர்கள் கவர்ந்துள்ளனர். இந்த கவர்ச்சி விளம்பரத்தை பார்த்து வரும் இளைஞர்களுக்கு துணை நடிகைகளை வைத்து மசாஜ் செய்வார்களாம்.. ஒருகட்டத்தில் எல்லை மீறி நடந்து, அந்த இளைஞர்களை மயக்கமாக்கி கூடுதல் பணத்தையும், இந்த நடிகைகளும், கல்லூரி பெண்களும் வாங்கிவிடுவார்களாம்.. இதற்கு “ஃபினிசிங் டச்” என்று இவர்களே ஒரு பெயரையும் வைத்திருக்கிறார்கள்.

“உதட்டு மசாஜ்” வரை சென்றால், தனி கட்டணம் வசூலிக்கப்படுமாம்.. ஆகமொத்தம், மசாஜ் என்ற பெயரில் பல்வேறு லீலைகளில் ஆபாசங்கள் எல்லைமீறி சென்றுள்ளதும் அந்த வீடியோக்களில் தெரியவந்துள்ளதாம். இப்போது வெயில் காலத்தில் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருவதால், மசாஜ்களுக்கான கிராக்கியும் எகிறி உள்ளதாம்.. அதாவது, தயிர் மசாஜ், பழ மசாஜ் என்ற பெயர்களில் தனித்தனி மசாஜ்கள் செய்யப்படுமாம்.

ஆனால், இவையெல்லாம் பெயரளவில்தான் வேறுபடுகிறதே தவிர, நோக்கம் முழுவதும் பாலியல் சேட்டை செய்து, இளைஞரர்களிடம் பணம் பறிப்பதுதானாம்.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டர்கள் அனைத்துமே போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளன.. இதைத்தொடர்ந்து, சென்னையின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்களிலும் போலீசாரின் வேட்டை தீவிரமாகும் என்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal