காங்கிரஸ் மாவட்ட் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் எரிந்த உடலில் குரல்வலை முற்றிலுமாக எரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தன்சிங் இரண்டு நாட்களாக காணவில்லையென போலீசாரிடம் அவரது மகன் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்டது. முன்னதாக காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மூன்று கடிதம் எழுதி இருந்தார். அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்கள் தனக்கு தர வேண்டிய பணம் தொடர்பாகவும், இதே போல தான் யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்ற விபரத்தையும் தெரிவித்து இருந்தார்.

ஏற்கனவே இறந்த உடலை எரித்தால் மட்டுமே குரல் வலை முற்றிலுமாக எரியும் என கூறப்பட்டுள்ளது. எனவே ஜெயக்குமாரை யாரோ ஒருவர் கடத்தி சென்று கொலை செய்த பின்னர் தோட்டத்திலேயே வைத்து எரித்து இருக்கலாம் என காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்த போதும் விசாரணைக்கு பிறகே அடுத்த கட்டம் தொடர்பாக தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஜெயக்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த முடிவின் அடிப்படையிலேயே ஜெயக்குமார் மரணம் கொலையா.? தற்கொலையா என்று தெரிய வரும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஜெயக்குமார் எழுதிய புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த, காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன், பள்ளி தாளாளர் ஜெய்கர், ஆனந்தராஜா, குத்தாலிங்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal