தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal