மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறங்கும் சு.வெங்கடேசன், நேற்று இவர் மதுரை தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதில் அசையும் சொத்து மதிப்பு: 98 லட்சத்து 26 ஆயிரத்து 389. பூர்வீக சொத்து மதிப்பு ரூ.6 லட்சத்து 40 ஆயிரம். மனைவி கமலாவின் சொத்து மதிப்பு ரூ.91 லட்சத்து 16 ஆயிரத்து 165. மகள் யாழினிக்கு ரூ.8 லட்சத்து 62 ஆயிரத்து 954 என மொத்தம் ரூ. 2 கோடியே 4 லட்சத்து 66 ஆயிரத்து 389 உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 2019 பொதுத்தேர்தலில் போட்டியிட்ட போது, தனது பெயரில் ரூ.3.28 லட்சம், மனைவி கமலா பெயரில் 9.25 லட்சம், மகள் யாழினி பெயரில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 300, மேலும் அசையா சொத்து ரூ.4.50 லட்சம் உட்பட மொத்தம் ரூ.19 லட்சம் மதிப்பு என கணக்கு காட்டியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவருடைய சொத்து மதிப்பு 10 மடங்கு உயர்ந்துள்ளது.

நல்ல முன்னேற்றம்தான்…!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal