தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. திருச்சி தொகுதியை காங்கிரஸ் பிடிவாதமாக கேட்டதால் ம.தி.மு.க.விற்கு தொகுதியை இறுதி செய்ய முடியாமல் தாமதம் ஆனது. இறுதியில், திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த முறை திருச்சி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் இந்த முறை மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் திருச்சி தொகுதியில் நடந்தது . யார் போட்டியிட வேண்டும், பாராளுமன்ற தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிக்காக பிரசாரம் செய்தல் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் துரை வைகோவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். இதனையடுத்து, திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் முதன்மை செயலாளரான துரை வைகோ அறிவிக்கப்பட்டார். திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal