அதிமுக – பாமக கூட்டணி பெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுநாள் உறுதியாகும் என்கிறார்கள். 7 லோக்சபா தொகுதி கொடுக்க உறுதி ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் 1 ராஜ்ய சபா தொகுதி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

முதலில் பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணி நினைத்தாராம். கிட்டத்தட்ட அடம் பிடித்தாராம். ஆனால் பாஜக கொடுத்த ஆபர் பாமகவிற்கு ஏற்றபடியாக இல்லை. அன்புமணி 10 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கேட்க.. ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கிடையாது. 4 லோக்சபா சீட் என்று பாஜக கூறியுள்ளாதாம்.

இதையடுத்து பாமக இறங்கி வந்து 10 லோக்சபா சீட் + அமைச்சர் பதவி என்றுள்ளதாம். இதையடுத்து 10 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + அமைச்சர் பதவிக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறி உள்ளதாம். இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக – பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணிக்கு பின் முக்கிய காரணமாக இருந்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ்.

முதலில் இவர்தான் பாஜக அமைச்சர் பதவி தரவில்லை என்றால் ஏன் அவர்களுடன் நாம் கூட்டணி வைக்க வேண்டும். மத்தியில் ஆட்சியில் வந்தாலும் அதில் நாம் பங்கு பெற மாட்டோம். எப்படியும் கூட்டணி கட்சிகளுக்கு பாஜக அமைச்சர் பதவி கொடுக்காது, அப்படி இருக்க 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இப்போதே அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று பிடிவாதமாக அன்புமணியிடம் ராமதாஸ் கூறியுள்ளாராம்.

முக்கியமாக ராமதாஸ் இதில் விடாப்பிடியாக அதிமுகதான் வேண்டும் என்று இருந்துள்ளார். என்ன நடந்தாலும் சரி கட்சியின் எதிர்காலம் முக்கியம். கடந்த சட்டசபை தேர்தலில் நாம் நல்ல வாக்கு பதிவு பெற்றோம். அப்படி இருக்க பாஜகவோடு சேர்ந்து அதை இழக்க வேண்டாம். பாஜகவிற்கு தமிழ்நாட்டில் அத்தனை நல்ல பெயர் இல்லை. கூட்டணி வைத்து எதிர்காலத்தை பாழாக்க வேண்டாம் என்று அப்பா ராமதாஸ் மகன் அன்புமணியிடம் விடாப்பிடியாக பேசி உள்ளார். இதுதான் பாமக அதிமுக கூட்டணி செல்ல முக்கிய காரணம் என்கிறார்கள்.

மேலும் பாமக கேட்ட தேர்தல் ‘விட்டமினை’ பாஜக கொடுக்கவில்லை என்கிறார்கள். நாங்கள் ‘விட்டமின்’ கொடுக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளதாம். அதிமுகவோ நாங்கள் இடம் கொடுக்கிறோம்.. ‘விட்டமினும்’ கொடுக்கிறோம். சில தொகுதிகளில் மட்டும் நாங்களே உங்களுக்கு செலவு செய்கிறோம். மற்ற தொகுதிக்கு கையில் ‘விட்டமினை’ கொடுக்கிறோம் என்று கூறி பாமகவை சம்மதிக்க வைத்துள்ளதாம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal