தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆலங்குளம் தென்காசி பகுதிகளில் பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கி வருகிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!
முத்தாய்ப்பாக தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம் புதுப்பட்டி உள்ள 4 வயது சிறுவன் ,1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் காப்பீட்டுத்திட்ட வாயிலாக வெற்றிகரமாக மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சை நடைப்பெற்றது. மாற்று கல்லீரல் நிராகரிப்பு ஏற்படாமல் இருக்க மாதந்தோறும் சுமார் ரூபாய் 5000 மதிப்புள்ள மருந்துகளை சுதிஸ் உட்கொள்ள வேண்டும்.
மிகவும், எளிய குடும்பத்தை சேர்ந்த சுதிஸின் பெற்றோர் நிலை அறிந்து மருத்துவர்கள் அறிவுறத்தும் வரை இம்மருந்துகளை அச்சிறுவனுக்கு திமுக தலைவர் முதல்வரின் சார்ப்பாக மூன்று மாத த்திற்கு ஒரு முறை மருந்துகளை பெற்று தர உறுதியளித்து முதல்கட்டமாக மூன்று மாதத்திற்கு தேவையான மருந்துகளை ஆலங்குளத்தில் உள்ள தனது அலுலகத்தில் வைத்து வழங்கினார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா. அத்துடன் அக்குழந்தைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்
மாதந்தோறும் மருந்துகள், இரத்த பரிசோதனைக்கு ரூபாய் 10,000 செலவாகிறது என பெற்றோர்கள் கூறியதை தமிழக முதல்வர் அவர்ககளின் கவனத்திற்கு எடுத்து சென்று, அரசு காப்பீட்டு திட்டத்தில் வாயிலாக தொடர் மருத்துவ தேவைகளுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா.
அமைச்சர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஏழை, எளிய குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதுதான் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.