‘தமிழகத்தில் உண்மையிலேயே சிறுபான்மையினர் மக்கள் மீது மறைந்த முதல்வர் ஜெயலிலதாதான் உண்மையான பாசம் வைத்திருந்தார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாசம் வைத்திருப்பது போல் வேஷம் போடுகிறார்’ என அ.தி.மு.க.வின் மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் பகீர் குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிற
மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தர்காவில், ஹெல்ப் ஹோம் என்ற இஸ்லாமிய தொண்டு நிறுவனத்தின் சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதனை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனத்தையும், கால் இல்லாதவர்களுக்கு செயற்கை கால்களையும் ,கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் திருப்பெயரில் கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் வழங்கி பேசியதாவது;
‘‘புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அதனை தொடர்ந்து புரட்சி தமிழர் எடப்பாடியார் சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கினார்கள். ஆனால் சிறுபான்மை இன மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் அவர்களின் வாக்கு வங்கியை மட்டும் பெற்றுக்கொண்டு, தொடர்ந்து அவர்களை திமுக வஞ்சித்து ஏமாற்றி வருகிறார்கள் இதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் மக்களின் மிக புனித மாதமான ரமலான் மாத காலத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க அம்மாவின் அரசு 5400 டன் அரிசி வழங்கியது இதன் மூலம் 3,000 மேற்பட்ட பள்ளிவாசல் பயன்பெற்றது. 2016-2021 திமுக ஆகிய காலங்களில் வக்பு வாரிய சொத்துக்கள் எல்லாம் அபகரிக்கப்பட்டன. அது எல்லாம் அம்மா ஆட்சியில் தான் அமைக்கப்பட்டு மீண்டும் வக்பு வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டது இதன் மதிப்பு ரூ.1500 கோடி ஆகும்.
அதேபோல் நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக்கட்டளை விலையில்லாமல் கொடுத்த அரசு அண்ணா திமுக அரசு. 2018 வரை ஹஜ் புனிதம் மேற்கொள்ள மத்திய அரசு நிதி வழங்கி வந்தது 2019 ஆம் ஆண்டு அந்த ஹஜ் பயண நிதி நிறுத்தப்பட்டது எடப்பாடியார் தமிழக அரசின் சார்பில் 8 கோடியை வழங்கினார்.
அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு நிதி போதாது என்று கேட்டார்கள் அதை உயர்த்தி 12 கோடியாக எடப்பாடியார் வழங்கினார். அப்போது 8166 இஸ்லாமிய மக்கள் ஹச் பயணத்தை மேற்கொண்டார்கள்.ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பொழுது சென்னையில் தங்கி செல்ல சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி வழங்கப்பட்டது
அதேபோல் 2016 முதல் ஹாஜியார்களுக்கு மாதம் தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் தொடங்கியது அதை எடப்பாடியார் 30,000 ஆயிரம் உயர்த்தி வழங்கினார். அம்மாவின் அரசு உலமாக்களில் ஓய்வூதிய பயனாளிகள் எண்ணிக்கையை 2,400 இருந்து 2600 உயர்த்தப்பட்டது. அம்மாவின் அரசு உலமாக்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை 3000 ஆக உயர்த்தப்பட்டது.உலமாக்களுக்கு இரண்டு சக்கர புதிய வாகனம் வாங்க 50 சகவீத மானியம் வழங்கப்பட்டது .வக்பு நிர்வாக மானியமாக 2 கோடியாக உயர்த்தப்பட்டது.
பள்ளிவாசல் மற்றும் தர்கா புரணைமைப்புக்கு வக்பு வாரிய தொகுப்பு நிதி மூணு கோடி ரூபாய் உருவாக்கப்பட்டது.2018 நாகப்பட்டினம் மாவட்டம் கஜா புயல் கனம் கனமழை பொழிந்த போது நாகூர் தர்கா குளக்கரை சுற்றுச்சூழல் இருந்து சரிந்து விட்டது எடப்பாடியாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தவுடன் உடனடியாக 4.25கோடி செலவில் சீரமைப்பு செய்து தந்தார். சீராபுராணம் இயற்றிய உருமலபுலவருக்கு எட்டையாபுரத்தில் மணிமண்டபம் அமைத்து ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாள் அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடுவது பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் அமைத்தது அம்மாவின் அரசு தமிழ்நாட்டின் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் முதன் முதலில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த யாஸ்மின் அஹமத் என்ற பெண்மணியை நியமனம் செய்யப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா திமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து நாட்டின் ஜனாதிபதியாக உருவாக்கினார்கள்
இதேபோல அம்மாவின் அரசு டாக்டர் அப்துல் கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ராமநாதபுரத்தில் துவக்கியது. திண்டுக்கல்லில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தான் வாழ்க்கை வரலாறை கல்வெட்டுகள் மணிமண்டபம் அமைத்து எம்ஜிஆர் நூற்றாண்டுகளின் போது திறந்து வைக்கப்பட்டது
கண்ணியமிக்க காயிதே மில்லத் சென்னையில் மணி மண்டபம் அமைத்தது அம்மாவின் அரசு. 10.10.2023 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 36 முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கடுமையாக குரல் கொடுத்தார். அதனைதொடர்ந்து மதுரையில் நடைபெற்ற எஸ் டி பி மாநாட்டில் அதிமுக ஆட்சி வந்த உடன் சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் எடப்பாடியார்.
தற்பொழுது பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடியார் தெளிவாக கூறிவிட்டார். இதனை தொடர்ந்து சிறுபான்மையின மக்கள் எடப்பாடியாருக்கு நாள்தோறும் ஆதரவளித்து வருகிறார்கள். இதனை கண்டு அரணடு போன ஸ்டாலின், இதனால் வரை ஏமாற்றி வாக்குகளை பெற்று வந்தோம் இனி பெற முடியாது என்ற அச்சத்தில், 33 மாதங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் இஸ்லாமிய மக்களுக்கு திட்டங்களை அறிவித்துள்ளார்
இது கண்டடைப்பு நாடகம்தான் உங்கள் மீது அக்கறை இருந்திருந்தால், ஆட்சிக்கு வந்த அன்றே அறிவித்திருப்பார்.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக தான் இஸ்லாமிய மக்கள் மீது பாசம் இருப்பது போல ஸ்டாலின் நாடகமாடுகிறார். ஆகவே ஸ்டாலின் போடுவது பகல் வேஷம், வருகின்ற தேர்தல் காலங்களில் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களும், எடப்பாடியாருக்கு உங்கள் ஆதரவு அளித்து, ஸ்டாலினுக்கு தகுந்த பாடத்தை நீங்கள் புகட்ட வேண்டும்’’ என கூறினார்.