திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் களத்தில் யார் போட்டியிடப் போகிறார்கள்… யாருக்கு மகுடம் சூட வாய்ப்பிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

திருச்சி மலைக்கோட்டையைப் பொறுத்தளவில் சிட்டிங் எம்.பி.யாக இருப்பவர் திருநாவுக்கரசர். இவர் தி.மு.க. கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் இவரது கால் கூட படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் ஒரு நிகழச்சிக்கு சென்ற போது அங்கிருந்த பொதுமக்கள், ‘தொகுதிக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா?’ என ஆவேசமாக கொந்தளித்தனர். அதற்கு எம்.பி., ‘அம்மா இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள் நான் என்ன செய்ய?’ என்ற தொனியில் பேசினார். இது அப்பகுதி மக்களை மேலும் கொந்தளிக்க வைத்தது.

இந்த முறை தி.மு.க.வே திருச்சியில் நின்றாலும் வெற்றிபெறுவது கடினம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்த நிலையில்தான் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ம.தி.மு.க. சார்பில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

அதே போல், அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே எம்.பி.யாக இருந்த ப.குமார் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது, பல்வேறு நலத்திட்டங்களை தொகுதிக்கு செய்திருக்கிறார் ப.குமார். தொகுதி மக்களுக்கும் நன்கு பரிச்சயம். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்துவந்தால், மற்றவர்களைப் போல் ஓய்வெடுக்காமல் தொகுதிக்குள் வலம் வருபவர். எனவே, ப.குமார் இந்த முறை போட்டியிட்டால், தி.மு.க.வின் பண பலத்தை மீறி மலைக்கோட்டையில் மகுடம் சூடுவார் என்கிறார்கள்.

ஏற்கனவே, பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் போட்டியிடப் போவது உறுதியாகிவிட்டது. லால்குடி, ஸ்ரீரங்கம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு எதிர்ப்பு அதிகம் இருப்பதால், மகனின் வெற்றியை நோக்கிதான் அவரது பார்வை இருக்கும் என்கிறார்கள்.

எனவே, திருச்சி மலைக்கோட்டையில் மகுடம் சூடுவது யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal