தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை அழகிரி இழந்ததற்கு காரணம், பெண் எம்.பி.யின் கண்ணீர்தான் என்கிறது டெல்லி வட்டாரங்கள்!

இது பற்றி டெல்லி அக்பர் சாலையில் உள்ள மூத்த கதர்சட்டைக்காரர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், கடந்த 13-ந்தேதி தமிழகத்துக்கு வருவதாக இருந்தார் மல்லிகார்ஜுன கார்கே. அவரை வரவேற்பது குறித்தும், அவரை வைத்து பிரமாண்டமான தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துவது பற்றியும் அழகிரி, செல்வப்பெருந்தகை மற்றும் தமிழக காங்கிரஸ் எம்.பி. க்கள் அனைவரிடமும் ஜூம் மீட்டிங்கில் ஆலோசனை நடத்தினார் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார்.

மேலிட பொறுப்பாளராக அஜோய்குமார் நியமிக்கப்பட்ட போதே புதிய காங்கிரஸ் தலைவர் விரைவில் நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வந்தன. இவரின் வருகையை இந்த தலைவர் மாற்றத்தை முன்னிறுத்திதான் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் எம்.பி. க்கள் அனைவரிடமும் ஜூம் மீட்டிங்கில் ஆலோசனை நடத்தினார் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார்.

ஆலோசனையின் ஒரு கட்டத்தில் பெண் எம்பி ஒருவர் தமிழக காங்கிரஸ் மற்றும் அழகிரி மீது சில குற்றச்சாட்டுகளை கூறியபோது வெகுண்டெழுந்தார் அழகிரி. அந்த பெண் எம்பியை கண்டித்து கடுமையாக சில விஷயங்களை பேசி இருக்கிறார் அழகிரி. மேலும், ‘‘2 சேலை, 2 ஜாக்கெட்டோடு காங்கிரஸுக்கு வந்த உனக்கு, இப்போது எவ்வளவு சொத்து இருக்குன்னு சொல்லவா? நீங்க இவ்வளவு வேகமாக வளர்ந்தது எப்படி..?’’ என்றெல்லாம் மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார் அழகிரி. நீயெல்லாம் என்னப்பத்தி கேள்விக் கேட்க வந்துட்டே! என்றெல்லாம் மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார் அழகிரி.

அவருடைய இந்த அருவருப்பான பேச்சை எம்.பி. க்கள் எதிர்த்தனர். அதேசமயம், ஜூம் மீட்டிங்கில் நடந்ததை கார்கேவுக்கும், ராகுலுக்கும் கண்ணீர் மல்க கடிதம் எழுதினார் அந்த பெண் எம்பி. கட்சியிலிருந்து விலகுவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். உடனே, அஜோய்குமாரிடமும், எம்.பி.க்களிடமும் நடந்தது பற்றி விசாரித்து உண்மைகளைத் தெரிந்து கொண்டார் ராகுல்காந்தி. மேலும், பெண் எம்பியை செல்வப்பெருந்தகை சந்தித்து விவகாரத்தை பேச, செல்வப்பெருந்தகை அறிவுரையின் பெயரில் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து அழுது புலம்பினார் அந்த பெண் எம்பி.

ஏற்கனவே, நாடாளுமன்ற தேர்தலில் சீட் வாங்கித் தருவதில் முறைகேடு செய்ததாகவும் அழகிரியின் பெயர் அடிபட்டுக்கொண்டிருந்தது. இது தொடர்பான புகார்களை ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கார்கேவுக்கு தெரிவித்தபடி இருந்தனர். இந்த சூழலில்தான், பெண் எம்பி விவகாரம் வெடிக்கவும் எல்லாம் சேர்ந்து அழகிரியை தூக்க வைத்துவிட்டது.

கடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தல் சமயத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நீண்ட காலம் பதவியில் இருந்தவர்களில் கே.எஸ்.அழகிரியும் ஒருவர். சரியாக கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்தான் இவருக்கு பதவி வழங்கப்பட்டது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நன்றாகவே செயல்பட்டது. சட்டசபை கூட்டணியில் பெரிய அளவில் இடங்களை கேட்டு பெற முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் நன்றாக போட்டியிட்டு இருந்தது. அதே சமயம் கூட்டணி கட்சியான திமுகவிற்கு கே.எஸ்.அழகிரிக்கும் இதில் லேசான உரசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெகு விரைவில் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம். கே எஸ் அழகிரி பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டு கடந்துவிட்டது. இதனால் புதிய தலைவரை நியமிக்க டெல்லி தலைமை ஆலோசனை செய்து வந்தது. எதிர்பார்த்தபடியே செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைவர் ஆகி உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal