இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று மோடியின் சொந்த தொகுதியான  வாரணாசியில் மக்களை சந்தித்து பேசினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது நாளாக யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று வாரணாசி பகுதியில் ஜீப்பில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி.

பிறகு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில்  ராகுல் காந்தி சுவாமி தரிசனம் செய்தார். சோனியா காந்தியின் தொகுதியாக இருந்த ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி யாத்திரை வரும் போது அதில் நான் பங்கேற்பேன் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மும்பை வரை 15 மாநிலங்களின் வழியாக சுமார் 6700 கிமீ தூரம் நடைபெறுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal