கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் நிற்க வேண்டாம் என பாஜக தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி. இந்த தொகுதி எப்போதும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்ததாக உள்ளது. கடந்த முறை பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்தார்.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் வெற்றி பெற்றார். பின்னர் அவரது மறைவைத் அடுத்து 2021-ல் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவில் போட்டியிட பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லி தலைவர்கள் மூலம் முயன்று வருகிறார்.

ஆனால் நீங்கள் போட்டியிட வேண்டாம் என்று பொன்.ராதாகிருஷ்ணனை தேசிய தலைமை அறிவுறுத்தியதாகவும், அவருக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பதவியை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் ராஜினாமா செய்தார். ஏற்கனவே தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுக்கு ஆளுநர் வாய்ப்பு வந்தபோதெல்லாம் பொன்.ராதாகிருஷ்ணனின் பெயர் பேசப்பட்டு வருவதும் இறுதியில் மாறுவதுமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த அப்படி இருக்காது கூறப்படுகிறது.

அப்படினா கன்னியாகுமரி பாஜக சார்பில் நிற்க போகும் வேட்பாளர் யார் என்ற கேள்வி அனைவரின் மத்தியில் எழும் நிலையில் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி அக்கட்சியில் விலகி பிப்ரவரி 25ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆகையால் அவரே கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி தவறும் பட்சத்தில் முன்னாள் ராணுவ வீரரான ஐயப்பன் என்பவர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal