தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. நாடாளும் மத்திய ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, மக்களாட்சியின் மாண்பை முற்றிலுமாக சிதைத்துள்ளனர். இன்றைய நம் உரிமை முழக்கமே நாளைய வெற்றி முழக்கமாக அமைந்திடும். திமுகவின் கொள்கை பலமும், உடன்பிறப்புகளாம் உங்களுடைய உள்ளத்தின் வலிவும் பாசிச சக்திகளை அச்சப்பட வைத்திருக்கிறது.

மதவெறி அரசியல் நடத்தும் பா.ஜ.கவை கருத்தியல் ரீதியாக, செயல்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளக்கூடிய வலிமை மாநில கட்சியான திமுகவுக்கு உள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை தூங்க விடாமல் செய்கிறது திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்.  அதனால், தான் எந்த மேடையில் ஏறினாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் தி.மு.க.வை அவர்கள் விமர்சிக்கிறார்கள்.  இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனை காப்பதற்கான உறுதியான குரலில் முதலில் முழங்கும் மாநிலம்  தமிழ்நாடுதான்.

அரசியல் கருத்துகளை – கொள்கை முரண்பாடுகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ள வலுவோ, நேர்மையோ இல்லாதது மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசு. அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை இவற்றை ஏவி, தனக்கு எதிரான இயக்கங்களை நசுக்கிவிடலாம் என வன்மத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சட்ட நெருக்கடி, ஆளுநர்களை வைத்து நெருக்கடி தரலாம் என அரசியலமைப்பு சட்டத்தையே அவமதிக்கும் வகையில் செயல்படுகிறது. இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனை காப்பதற்கான உறுதியான குரலில் முதலில் முழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal