தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள்தான் கொடுக்கப்படும் என உறுதியாக கூறிவிட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தி.மு.க.விடம் 6 தொகுதிகளை கேட்டு முதற்கட்ட பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறது.

திமுகவுடன் முதற்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியது. டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழுவுடன் மா.கம்யூனிஸ்ட் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மா.கம்யூ தரப்பில் சம்பத், சண்முகம், குணசேகரன், கனகராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் -சிபிஎம் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தென்காசி, மதுரை, கோவை, குமரி, நாகை உள்ளிட்ட 6 தொகுதிகளை கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal